Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தாய் இறந்த வேதனை…. துக்கத்தில் மகன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேல்கூடலூர் குறிஞ்சி நகரில் ராபர்ட் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஜான் பிரிட்டோ என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜான் பிரிட்டோவின் தாய் இறந்துவிட்டார். அதிலிருந்து மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜான் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜான் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜானின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |