Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தாய் கண்முன்னேயே…. 4 வயது சிறுமி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தாய் கண்முன்னே 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணங்குடிகாடு கிராமத்தில் நீலகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் நீலகண்டனின் மகள் சம்யுக்தா(4) தனது தாயுடன் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மினிலாரி சம்யுக்தா மீது மோதியது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவசங்கரி கதறி அழுததால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சம்யுக்தாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |