Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தாய் கண் முன்னையே…. அண்ணனை குத்திக்கொன்ற சிறுவன்…. பரபரப்பு சம்பவம்….!!

தாய் கண்முன்னேயே தம்பி தனது அண்ணனை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை திருவேகம்பன் நகரில் செல்வராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் சி.எஸ்.ஐ பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு செல்வ ராணியின் கணவர் பிரபுதாஸ் இறந்துவிட்டார். இதனால் செல்வராணி வின்சென்ட்(21), ஷெர்லி ஜான்(19) என்ற தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இதில் வின்சென்ட் பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஜான் பச்சையப்பன் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜான் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வராணி தனது மகனை கண்டித்துள்ளார்.

இதில் கோபமடைந்த ஜான் தனது தாயை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை வின்சென்ட் கண்டித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஜான் சமையலறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து தனது அண்ணனை சரமாரியாக குத்தி கொலை செய்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வின்சென்டின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஷெர்லி ஜானை கைது செய்தனர். தாய் கண் முன்னையே தம்பி தனது அண்ணனை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |