Categories
உலக செய்திகள்

“தாய் செய்த கொடுமை” 12 வயதில் வீட்டு சிறை…. 41 வயதில் மீட்பு…. நெஞ்சை உருக்கும் சம்பவம்…!!

தாய் ஒருவர் தன் சொந்த மகனை வீட்டின் அறையில் பூட்டி வைத்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்வீடன் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 70 வயது தாய் ஒருவர் தன்னுடைய சொந்த மகனை 28 வருடங்களாக அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்ததாக அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் தன்னுடைய மகனை பல வருடங்களாக வெளி உலகத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் அறையில் அடைத்து வைத்துள்ளார். மேலும் அந்த வாலிபருக்கு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக எல்லா பற்களும் விழுந்த நிலையில் மீட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த நபர் ஆபத்து நிலையை அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த தாய் தன்னுடைய மகனை உடல் ரீதியாக துன்புறுத்தியதோடு அறையில் பூட்டி வைத்ததாகவும் வெளி வந்த செய்தியை காவல் துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் மறுத்துள்ளார். ஆனால் அவர் தன்னுடைய மகனை 28 வருடங்களாக கட்டி வைத்ததுடன், 12 வயது முதல் பள்ளிக்கு அனுப்பாமல் வைத்ததாகவும் ஊடகங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன. தற்போது அந்த தாயார் மருத்துவமனைக்கு சென்ற போது அருகில் உள்ள நெருங்கிய உறவினர் ஒருவர் அந்த நபரை கண்டுபிடித்து  அளித்துள்ளார்.

இரண்டு கால்களிலும் காயங்கள் காரணமாக நடக்கவே அவதிப்பட்ட 41 வயதாகும் அந்த வாலிபர் இருந்த அறையில் தாங்க முடியாத துர்நாற்றம் வீசியதாகவும், அந்த நபரை கண்டவுடன்  தன்னுடைய நெஞ்சு நொறுங்கி போய்விட்டதாகவும் வாலிபரை கண்டுபித்த உறவினர் கூறியுள்ளார். மேலும் அந்தத் தாய் கொடூர குணம் கொண்டவர் என்று தங்களுக்கு ஏற்கனவே தெரியும் ஆனால் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்வார் என்பது தெரியாமல் போனது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |