ரஜினிகாந்த் அரசியலை விட்டு விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தாலும் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் இடையேயான பிணைப்பில் ஒருபோதும் இடைவெளி ஏற்பட்டதில்லை. ரஜினி கடந்த 2008 ஆம் வருடம் ரசிகர்களை சந்தித்துள்ளார். ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இவர்கள் தன்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளை சீட்டில் எழுதிக் கொடுக்கலாம் என ரஜினி உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஒரு ரசிகர் கேட்ட கேள்வி வாசிக்கப்பட்டுள்ளது அதில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி பக்கத்தில் இருக்கும் உங்கள் பிறந்த ஊரான நாச்சி குப்பத்தில் உங்கள் தாய் தந்தையாருக்கு நினைவு மண்டபம் கட்டுவீர்களா என்று வாசிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கேள்வியை கேட்டவுடன் ரஜினியின் முகத்தில் ஒரு பிரகாச ஒளி ஏற்பட்டது அவரது மன மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது இந்த நிலையில் அந்த ரசிகர் யார் என ரஜினி கேட்க கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவகார்த்திகேயன் என அந்த ரசிகர் எழுந்து நின்றார். அவர் மீது தனி பாசம் கொண்ட ரஜினி தன்னை வீட்டில் வந்து சந்திக்கும்படி கூறியுள்ளார் மறுநாள் வீட்டில் சந்தித்தவரிடம் மனம் விட்டு பேசி உள்ளார். இதனை அடுத்து சிவகார்த்திகேயனுக்கு கிருஷ்ணகிரி மன்றத்தில் முக்கிய பொறுப்பும் கொடுத்து அழகு பார்த்தார் ரஜினிகாந்த் கார்த்திகேயன் எழுப்பிய கேள்விக்குப் பின் நாசி குப்பத்தின் மீது ரஜினியின் பார்வை விழுந்துள்ளது.
அங்கு தன்னுடைய அம்மா ராமாபாய், தந்தை ராமோஜிராவ் வீட்டின் தற்போதைய சூழ்நிலை எல்லாவற்றையும் அவ்வபோது கேட்டு தெரிந்து கொண்டே இருக்கின்றார். நாசி குப்பத்தில் ரஜினியின் மாமா, அத்தை போன்றோர் பூர்வீக வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர் அந்த வீடு அமைந்திருக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே ரஜினிக்கு சொந்தமான ஒரு தோட்டம் போன்ற இடம் அமைந்துள்ளது அங்கு முதற்கட்டமாக வேலை அமைத்து ஒரு தண்ணீர் தொட்டியை அமைக்க ரஜினி உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து வயல், விவசாயம் வேலைகளை மட்டும் நம்பி இருக்கும் கிராமத்தின் தண்ணீர் தேவையை போக்குவதற்காக இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து அந்தப் பகுதியில் இருந்தவர்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகி உள்ளது தான் பிறந்த கிராமத்தை நினைவு படுத்திய கிருஷ்ணகிரி கார்த்திகேயன் இடமே இடத்தை பாதுகாப்பதற்கான பொறுப்பையும் ரஜினி கொடுத்துள்ளார் இது நடைபெற்று பல வருடங்கள் ஆகியுள்ளது. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் தாய் தந்தையருக்கு சிலை அமைக்கும் பணிக்காக இடம் தூய்மை செய்யப்பட்டு பணிகள் நடத்தப்பட்டுள்ளது. தோட்டத்து பகுதியில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ஓடுவேய்ந்த சிறிய அளவிலான மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது ஒரு பீடம் கட்டப்பட்டு அதில் பெற்றோரின் மார்பளவு சிலைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ரஜினியின் பெற்றோர் வசித்த பழைய வீடு இடிக்கப்பட்டு அங்கு நினைவு மண்டபம் கட்டும் பணிகள் நடக்க இருப்பதாக கூறப்படுகின்றது.