மறுமணம் செய்து கொண்ட தந்தை ஒருவர் தன்னுடைய குழந்தை தன்னிடமிருந்து வளர வேண்டும் என்று தொடரப்பட்ட ஒரு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த உத்தரவில், குழந்தை தன்னுடைய தாயின் பராமரிப்பில் உள்ளது. இந்நிலையில் தந்தை, தன்னிடம் போதிய வசதி உள்ளதாகவும், நன்கு படித்து உள்ளதாகவும் அதனால் தாயிடம் இருப்பதைவிட தன்னிடம் இருந்தால் சிறப்பாக வளரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குழந்தையை தான் கவனித்துக் கொள்வதாகவும் மாற்றந்தாயும் கூறியுள்ளார். எந்த ஒரு குழந்தை தன்னுடைய தாயின் அன்பை விட நிச்சயம் கொடுக்க முடியாது அதனால் குழந்தை தன் தாயிடம் வளர வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் வழக்கு தொடர்ந்ததற்காக குழந்தையின் தந்தை ஐம்பதாயிரம் ரூபாயை குழந்தைக்கு வழங்க வேண்டும். ஒரு மாதத்தில் அளிக்காவிட்டால் குழந்தையை பார்க்க அனுமதிக்கப்பட்டமாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.