மொபட் மீது டிராக்டர் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சங்கிப்பட்டி பகுதியில் பழனியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தாய் மகன் இருவரும் மொபட்டில் மணப்பாறைக்கு சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து இவர்கள் மணப்பாறை கோவில்பட்டி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வேகமாக வந்த டிராக்டர் மொபட் மீது பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த மணப்பாறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயற்சி செய்துள்ளனர். ஆனால் 2 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு ஒரே நேரத்தில் வந்ததால் எந்த ஆம்புலன்சில் மூதாட்டியின் உடலை ஏற்றி செல்வது என ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதன்பின் காவல்துறையினர் மூதாட்டியின் உடலை ஒரு ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு படுகாயமடைந்த ராஜுவை மற்றொரு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.