நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மின்னாம்பள்ளி அண்ணா நகரில் கூலி தொழிலாளியான சின்ராஜ்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது இரண்டாவது மனைவி அமலா. இந்த தம்பதியினருக்கு 8 வயதுடைய மகள் இருக்கிறாள். கடந்த 2017-ஆம் ஆண்டு சின்ராஜ் அவரது அண்ணன் பந்தல்ராஜ்(38), தம்பி பசுபதி(27) ஆகியோருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சின்ராஜ் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பந்தல் ராஜ், பசுபதி மற்றும் அவர்களது தாய் அங்காயி ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பசுபதி, தனது அண்ணியான அமலா வீட்டிற்கு சென்று கொலை வழக்கு குறித்த புகாரை வாபஸ் பெறுமாறு கூறி அவரையும், 8 வயது மகளையும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து அமலா சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியின் பேரில் போலீசார் பசுபதி, பந்தல்ராஜ், அங்காயி மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து பசுபதி மற்றும் பந்தல்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். தலைமுறைவாக இருக்கும் அங்காயியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.