குண்டூர் அருகே சொத்து தகராறு காரணமாக தாய் மகள் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசராவ் என்பவருக்கும் இவரது பெரியம்மா பத்மாவதி என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக சீனிவாசராவ் தனது பெரியம்மா வீட்டிற்கு வந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவ தினத்தன்று இரவு அதேபோல் சொத்து பிரச்சனை காரணமாக பெரியம்மா பத்மாவதி வீட்டிற்கு சென்று சீனிவாசராவ் சண்டைபோட்டு வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் முற்றவே ஆவேசமடைந்த சீனிவாசராவ் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து பத்மாவதி மற்றும் அவரின் மகள் லட்சுமி ஆகியோரை குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து சீனிவாசராவ் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.