Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாய்-மகள் கொடூர கொலை….. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…. இலங்கை அகதி கைது….!!

நகை மற்றும் பணத்திற்காக தாய் மகளை கொடூர கொலை செய்த இலங்கை அகதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் காளியம்மாள் தனது 2வது மகள் மணிமேகலையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். காளியம்மாள் அப்பகுதியில் ரயில்வே மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி காளியம்மாள் மற்றும் அவரது மகள் மணிமேகலை வீட்டில் மர்மமான முறையில் தீயில் உடல் கருகி உயிரிழந்து கிடந்துள்ளனர். இதுகுறித்து அவரது மூத்த மகள் சண்முகப்பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இதையடுத்து காளியம்மான் மண்டபம் இலங்கை அகதிகள் முகாம் எதிரே சொந்தமாக வீடு கட்டி வந்துள்ளார். இந்நிலையில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சசிக்குமார் என்பவர் அங்கு கட்டிட வேலை செய்து வந்துள்ளார். மேலும் காளியம்மாள் வசித்த வீட்டிலும் அவ்வபோது சில வேலைகளை செய்து கொடுத்துள்ளார். இதனையடுத்து காளியம்மாள் அவரது மகளுடன் தனியாக வசித்து வந்ததால் சசிகுமார் ஒரு மாதங்களாக காளியம்மாள் வீட்டை நோட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் சசிகுமாரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி இரவு சசிகுமார் காளியம்மாள் வீட்டின் பின்புறம் வழியாக புகுந்து தூங்கிக்கொண்டிருந்த காளியம்மாள் மற்றும் மணிமேகலையை இரும்பு கம்பியால் தலையில் தாக்கியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து அவர்கள் அணிந்திருந்த தங்க நகை மற்றும் வீட்டில் நகை, பணம் உள்ளிட்டவர்களை கொள்ளை அடித்துள்ளார். மேலும் இச்சம்பவம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக பீரோவில் இருந்த துணிகள் கீழே போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனைதொடர்ந்து காவல்துறையினர் சசிகுமார் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர். இதற்கு பின் அவர் கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |