Categories
தேனி மாவட்ட செய்திகள்

தாய், மனைவிடம் தகராறு செய்ததால்…. ராணுவ வீரர் செய்த காரியம்…. தேனியில் பரபரப்பு….!!

தாய் மற்றும் மனைவிடம் தகராறு செய்தவர்களை மிரட்டுவதற்காக துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வ.உ.சி. நகரில் முருகன் (வயது 36) என்பவர் வசித்து வருகிறார். இந்திய ராணுவத்தில் மேற்கு வங்காள படைப்பிரிவில் பணிபுரிந்து வரும் இவருக்கு சரவணபிரியா (26) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சரவணபிரியாவை போடி சர்ச் தெருவை சேர்ந்த தீனதயாளன் (26) கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சரவணபிரியா ராணுவத்தில் பணிபுரியும் முருகனுக்கு உடனடியாக செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த முருகன் அங்கு இருந்தவாறே தேனி மாவட்ட சூப்பிரண்டு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் போடி நகர் காவல்துறையினர் தீனதயாளனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் இரண்டு குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. தற்போது முருகன் 1 1/2 மாத விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தீனதயாளனின் தந்தை மணிவண்ணன் மற்றும் தாய் ஞான ஒளி ஆகிய இருவரும் சரவணபிரியா மற்றும் அவரது மாமியார் முத்துலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் எனது மகன் சிறைக்கு சென்றதற்கு காரணம் நீங்கள்தான் என தகாத வார்த்தைகள் கூறியும், அரிவாளை காட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சரவணபிரியா உடனடியாக தனது கணவருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முருகன் மணிவண்ணன் மற்றும் ஞான ஒளியை மிரட்டியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அவரிடம் இருந்த கை துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மணிவண்ணன் போடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் முருகனை கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் செய்துள்ளனர். இதற்கிடையே சரவணபிரியா அளித்த புகாரின் அடிப்படையில் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த மணிவண்ணன் மற்றும் ஞான ஒளி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |