Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாய் வீட்டிற்கு சென்ற கர்ப்பிணி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

ஆறு மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தக்கோட்டை பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதிகா(25) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த ராதிகா நல்லம்மாள்சத்திரத்தில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து வீட்டிற்கு பின்புறம் சென்றபோது பாம்பு கடித்ததால் மயங்கி விழுந்த ராதிகாவை குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராதிகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |