முப்படை வீரர்களின் கொடிநாள் நிதிக்கு மக்கள் நன்கொடை வழங்க முன்வரவேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 7ஆம் தேதி கொடி நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் நாட்டின் இறையாண்மையைக் காக்கும் உயரிய சேவையில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களின் தியாகத்திற்கு நாட்டு மக்கள் நன்றிக் கடன் செலுத்துவார்கள். இதனையடுத்து நாளை கொடி நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நம் படை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதி தந்து உதவுங்கள் மக்களே” என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து முப்படை வீரர்களின் கொடிநாள் நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்க மக்கள் முன்வர வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கொடி நாளுக்கான நமது பங்களிப்புகள் துணிச்சல் மிகு வீரர்களுக்கு நாம் அளிக்கும் ஆதரவிற்காக சான்றாக அமைகிறது. இந்த நேரத்தில் படைவீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.