Categories
மாநில செய்திகள்

தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை… இல்லத்தரசிகளுக்கு கடும் ஷாக்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவான புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல முக்கிய பகுதிகளில் வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது நிலைமை சற்று சீரடைந்து கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க சென்னையில் தொடர் மழை காரணமாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகின்றது.

பருவ மழைக்கு முன்பாக 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது மழை மற்றும் புயல் காரணமாக சரசரவென விலை உயர்ந்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் தக்காளி விலை கடும் விலை உயர்வை சந்தித்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் ஒரு கிலோ தக்காளி 140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது இல்லத்தரசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |