Categories
மாநில செய்திகள்

தாறுமாறாக எகிறிய கியாஸ் சிலிண்டர் விலை…. மண் அடுப்புகளுக்கு அதிகரிக்கும் மவுசு….!!!

சமையல் கேஸ் விலை உச்சத்தைத் தொட்டு உள்ள காரணத்தினால் மக்கள் அனைவரும் மண் அடுப்புகளுக்கு மாறி வருகின்றனர்.

பெட்ரோல் டீசல், விலை உயர்வு காரணமாக அனைத்துப் பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் சமையல் கியாஸ் விலையையும் உயர்த்த பட்டுள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் கிராமங்களில் கியாஸ் அடுப்புகள் அதிக அளவு பயன்பாட்டில் உள்ள இந்த நேரத்தில் விலை உயர்வு மீண்டும் மண் அடுப்புகளை நோக்கி திரும்ப வைத்துள்ளது.

ஆரம்பகாலங்களில் சமையல் அறையில் மண் அடுப்பு மட்டுமே இருக்கும். மண் அடுப்புகளை  கைவிட்டு பலரும் மண்ணெண்ணெய் அடுப்பு, மண்ணெண்ணெய் பம்பு அடுப்பு, கேஸ் அடுப்பு என்று அடுத்த அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றனர். தற்போது வருமானத்தின் ஒரு பகுதியை கியாஸ் சிலிண்டர் திண்று விடுவதால் மீண்டும் கிராமபுறங்களில் எளிதாக கிடைக்கும் விறகுகளை சேகரித்து மண் அடுப்புகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மண் அடுப்புகள் மட்டுமல்லாமல் மின்சார அடுப்புகளின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. என்னதான் இருந்தாலும் மண் அடுப்பில் சமைப்பது தனி ருசிதான்.

Categories

Tech |