லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சேரிமலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சின்னேரிபாளையம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10 பயணிகளை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து நடந்தபோது பேருந்தில் டிரைவருக்கு இடது புறம் குறைவாக பயணிகள் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.