Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய ஆம்னி வேன்….. உயிருக்கு போராடி கொண்டிருந்த வாலிபர்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

ஆம்னி வேன் சாலையில் கவிழ்ந்த விதத்தில் வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கூம்பூரில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் சூர்யா ஆம்னி வேனில் வேடந்தூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் நாகம்பட்டி பிரிவு பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சூர்யாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Categories

Tech |