Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கல்லூரி பேருந்து…. தடுப்பு சுவரில் மோதி விபத்து…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கல்லூரி பேருந்து தடுப்பு சுவரில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு தாம்பரத்தில் இருக்கும் தனியார் கல்லூரி பேருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கொளத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை பிரான்சிஸ் சேவியர்(64) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மாணவர்களை இறக்கி விட்டு கல்லூரி பேருந்து கொடுங்கையூருக்கு வந்தது. இதனை அடுத்து கொடுங்கையூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.

பின்னர் சாலை நடுவே இருக்கும் தடுப்பு சுவரில் மோதி பேருந்து நின்றதால் முன்பகுதி சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து அறிந்த போக்குவரத்து போலீசார் விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |