ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியில் பாலதேவகுரு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை கல்லூரி முடிந்து பாலதேவகுரு காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு பேருந்து நிலையத்தை கடந்து சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற 2 மோட்டார் சைக்கிள்கள், சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதிவிட்டு, மின்கம்பத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தில் பாலதேவகுரு லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனையடுத்து காயமடைந்த சரக்கு வேன் ஓட்டுனர் ஜெயபாலனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கார், சரக்கு வேன், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை சேதமடைந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.