Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. தென்காசியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் நகை வியாபாரி உள்பட 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில் நகை வியாபாரியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான கௌதம் என்பவருடன் தனது புதிய காரில் தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இவர்கள் நண்பரின் நோன்பு விரதத்தில் கலந்து கொண்ட பிறகு மீண்டும் மதுரை நோக்கி புறப்பட்டு உள்ளனர். இந்நிலையில் ஆலம்பட்டி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. உடனே தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனை பார்த்ததும் சரவணனும், கௌதமும் கதவை திறந்து வெளியே குதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |