தாறுமாறாக ஓடிய கார் அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் திட்டை பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று நடராஜன் வாழவிளை நோக்கி ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மணி, மாயி ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் தக்கலை பேருந்து நிலையம் அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் சாலையில் நடந்த சென்ற கணேசன் என்பவர் மீது மோதியது. மேலும் அவ்வழியாக வந்த மினி டெம்போ மீதும் கார் மோதியது.
இந்த விபத்தில் நாகராஜன், மணி, மாயி, கணேசன் ஆகிய நான்கு பேரும் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் கார் ஓட்டுநரான பெஞ்சமின்(32) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.