கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாமரைக்குளம் பகுதியில் மஸ்கிரியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் பிரின்ஸ் என்பவரும் ஸ்டூடியோவில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் புகைப்படம் எடுப்பதற்காக 2 பேரும் காரில் சென்றுள்ளனர். இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செங்குளம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மஸ்கிரியன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.