Categories
உலக செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. கோர விபத்தில் 5 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கோர விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் நடந்து சென்று கொண்டிருந்த 5 பேர் மீது பயங்கரமாக மோதியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விபத்து ஏற்பட காரணமாக இருந்த 60 வயதுடைய கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கார் மோதியதில் 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |