கார் கட்டுப்பாட்டை இழந்து நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது மோதி நின்றது .
மதுரை மாவட்டத்திலுள்ள கோச்சடை பகுதியில் சாலையில் கார் சென்று கொண்டிருந்தது . இந்நிலையில் திடீரென கட்டுபாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதனை பார்த்த பொதுமக்கள் டிரைவரை பத்திரமாக மீட்டனர். எனவே அவர் எந்தவித காயம் இன்றி உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையனர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரை அப்புறப்படுத்தினர். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.