கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இலந்தா வெட்டி கிராமத்தில் ராம் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே கிராமத்தில் வசிக்கும் சதீஷ்குமார் என்பவரும் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ராம்குமாரும், சதீஷ்குமாரும் இணைந்து ஆழ்குழாய் போடும் பணிக்காக இரும்பு ராடு உள்ளிட்ட உபகரணங்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு கறம்பக்குடி நோக்கி புறப்பட்டனர்.
இந்த டிராக்டரை சதீஷ்குமார் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கரம்பக்குடி பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் உடல் நசுங்கி ராம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் லேசான காயத்துடன் சதீஷ்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராம்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.