Categories
தேனி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய மினி லாரி…. 30 ஆயிரம் முட்டைகள் சேதம்…. அதிஷ்டவசமாக உயிர்தப்பிய லாரி டிரைவர்கள்….!!

தேனியில் முட்டைகளை ஏற்றி கொண்டு சென்ற மினி லாரி கவிழ்ந்தது.

நாமக்கல் என்றாலே முதலில் அனைவருக்கும் முட்டை தான் ஞாபகத்திற்கு வருவது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து மினி லாரி ஒன்று சுமார் 30,000 கோழி முட்டைகளை ஏற்றிக்கொண்டு தேனி-போடி வழியாக கேரள மாநிலத்திற்கு சென்றுள்ளது. அப்போது மினி லாரி போடியிலிருக்கும் முந்தல் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது சற்றும் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியுள்ளது.

இந்நிலையில் மினி லாரி அங்கும் இங்கும் தாறுமாறாக ஓடியதால் ஒரு கட்டத்தில் அங்கு நின்று கொண்டிருந்த மரத்தின்மீது சட்டென்று மோதி விட்டது. இதில் வண்டியில் இருந்த இரு டிரைவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார்கள். இருப்பினும் வண்டியிலிருந்த முட்டைகள் அனைத்தும் உடைந்து நாசமாக்கியது.

Categories

Tech |