கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து மலப்புறம் நோக்கி லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அதன்பின் சாலையோர பள்ளத்தில் இருந்த ஒரு வீட்டின் பின்புறம் கவிழ்ந்து லாரி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி ஓட்டுனர் உயிர் தப்பிவிட்டார். இதேபோல் கோழிக்கோட்டில் இருந்து மைசூரு நோக்கி புறப்பட்ட லாரி நடுவழியில் பழுதாகி நின்றதால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.