Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி…. மளிகை கடைக்குள் புகுந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி மளிகை கடைக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள முடுவார்பட்டி சாலையில் மணல் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. இதனை அடுத்து சாலையோரம் இருந்த மளிகை கடைக்குள் லாரி புகுந்துவிட்டது.

இந்த விபத்து நடந்த நேரம் பொதுமக்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |