கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் எகியா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் எகியா, அவரது உறவினர்கள், நண்பர்கள் என 15 பேர் கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு ஊட்டி வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை மணிகண்டன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் பர்லியாறு- கல்லாறு இடையில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த எகியா(45), அப்ரிடி(24), முகமது(57), ஹர்சியா(12) ஆகிய 4 பேரையும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.