லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து கண்டெய்னர் லாரி ஒன்று கர்நாடக மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சரவணன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூர் செம்மண் திட்டு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சரவணன் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். இதனை அடுத்து அவ்வழியாக சென்றவர்கள் காயமடைந்த சரவணனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.