Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடி கவிழ்ந்த வேன்…. படுகாயமடைந்த 12 தொழிலாளர்கள்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 12 பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பித்தளைப்பட்டி பிரிவில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை அமைந்துள்ளது. இந்த நூற்பாலையில் வேலை செய்யும் 20-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வேனில் தங்களது வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேலை வேல்முருகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலையில் பஞ்சம்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்துவிட்டது.

இந்த விபத்தில் ஜான்சி, ராஜேஸ்வரி உள்பட 12 பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |