Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“தாலி,சேலை வாங்கி வருகிறேன்” காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணை ஏமாற்றிய காதலன் உள்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அனுப்பபட்டியில் கருப்பசாமி(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கருப்பசாமியும், 33 வயதுடைய பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கருப்பசாமி திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் 2 பேரும் திருமங்கலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கணவன் மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். அதற்காக தாலி மற்றும் சேலை வாங்கி வருகிறேன் என கருப்பசாமி கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதுகுறித்து கருப்பசாமியின் உறவினர்களிடம் அந்தப் பெண் கேட்டுள்ளார். அதற்கு கருப்பசாமியின் தாய் முனியம்மாள், சகோதரன் முனுசாமி ஆகிய இருவரும் அந்தப் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |