திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு செல்ல இருந்த பெண் அழுது அழுது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் சோனாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த குப்தேஸ்வரி சாஹூ என்பவருக்கும், பலங்கீர் மாவட்டத்தில், டெட்டல்கான் கிராமத்தை சேர்ந்த பிசிகேசன் என்பவருக்கும் கடந்த வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு செல்ல தயாராகினர். இதனால் பெண் வீட்டார் செய்யும் சடங்குகள் அனைத்தையும் செய்துவிட்டு வழியனுப்பும் போது தனது குடும்பத்தை விட்டு செல்ல மனமில்லாமல் அந்தப் பெண் நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தாள்.
திடீரென்று மயக்கமடைந்து தரையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் அவர்களின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பும் முயற்சி செய்தபோதும் அவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து அருகில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அழுது அழுது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக பரிசோதனையில் தெரியவந்தது.