Categories
தேசிய செய்திகள்

“தாலியை விற்று கணவனை கொல்ல பணம் கொடுத்த மனைவி”… கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிராவை சேர்ந்த தானே என்ற பகுதியில் வசித்து வரும் பிரபாகரன் என்பவரின் மனைவி ஸ்ருதி. ஸ்ருதிக்கு அதே பகுதியை சேர்ந்த ஹிதேஷ் வாளா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து கணவனை விவாகரத்து செய்துவிட்டு கள்ளக்காதலனோடு சேர்ந்து வாழ விரும்பிய ஸ்ருதி தனது கணவரிடம் சென்று தான் உன்னுடன் வாழ விரும்பவில்லை என்றும், எனக்கு விவாகரத்து கொடு என்றும் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். பின்னர் நான் ஒருத்தரை காதலிப்பதாக கணவரிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு கணவன் கூறிய பதில் அதிர்ச்சியைத் தரும் வகையில் இருந்தது. நீ யாரை வேண்டுமானாலும் காதலித்துக்கொள். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. நீ எனக்கு மனைவியாக இரு என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி தனது தோழி மற்றும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய முடிவு செய்து, பின்னர் சந்தோஷ் ரெடி என்பவரின் தலைமையில் இயங்கி வரும் கூலிப்படை இடம் 3 லட்சம் பணம் கொடுத்து தனது கணவரை கொலை செய்யும்படி தெரிவித்துள்ளார்.

அவர்களும் ஸ்ருதியின் கணவர் பிரபாகரனை காரில் அழைத்துச் சென்று ஒரு இடத்தில் வைத்து கொடூரமாக கொலை செய்து விட்டனர். பின்னர் அந்த கூலிப்படைக்கு தனது தாலியை விற்று ஸ்ருதி பணம் கொடுத்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிய வரவே வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறகு இந்த கொலையை செய்த சந்தோஷ் மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த மனைவி ஸ்ருதி, பிரியா மற்றும் ஸ்ருதியின் கள்ளக்காதல் ஹிதேஷ் வாளா ஆகியோரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |