திருமணம் என்றாலே ஐயர் வந்து முறைப்படி மந்திரங்கள் ஓதி, தாலி எடுத்துக்கொடுத்து திருமணம் செய்து வைப்பது வழக்கம். இதுதான் ஐயர்களின் வேலை. ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் திருமணம் நடத்தி வைக்க வந்த ஐயர் தாலி சங்கிலியை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் ஜன சுந்தர் என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக ஐயர் வந்துள்ளார். இதையடுத்து மந்திரங்கள் ஓதிய பின்னர் மணமகன் மஞ்சள் கயிற்றை மணமகள் கழுத்தில் கட்டியுள்ளார்.
பின்னர் தங்கச்சங்கிலியை அணிவிக்க பார்த்தபோது தான் மூன்று லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி காணவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் அங்கிருந்த ஐயரையும் காணவில்லை என்பதால் சந்தேகத்தின் அடிப்படையில் மணமக்களின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரித்த காவல்துறையினர் அங்கிருந்த கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஆராய்ந்த போது திருமணம் நடத்தி வைக்க வந்த அய்யர்தான் தங்கச்சங்கிலி திருடியுள்ளது தெரியவந்துள்ளது.