தாலி குறித்து பரவிய வதந்திக்கு ஒத்த புகைப்படத்தை பகிர்ந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மகாலட்சுமி.
விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் இருவரும் திருமணம் முடிந்த கையோடு மகாபலிபுரத்தில் இருக்கும் ரெசார்ட்டில் ஹனிமூன் கொண்டாடி வருகின்றார்கள். முன்னதாக மாடர்ன் டிரஸ்ஸில் கழுத்தில் மஞ்சள் கயிறுடன் இருந்த புகைப்படத்தை மகாலட்சுமி பகிர்ந்திருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் நயன்தாராவை காப்பி அடிக்கிறீர்களா என கேட்டு வந்தார்கள். இதன் பிறகு வெளியான புகைப்படங்களில் மகாலட்சுமியின் கழுத்தில் தாலி கயிறு இல்லை. இதை பார்த்த நெட்டிசன்கள் என்ன அதற்குள் தாலியை கழட்டி விட்டீர்களா என கேள்வி எழுப்பினார்கள். அந்தப் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என தெரியாது நிலையில் தற்போது ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஊடகப் பிரபலங்களுடன் இருக்கும் அந்த புகைப்படத்தில் மகாலட்சுமி தாலி அணிந்திருக்கின்றார். இதன் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
https://www.instagram.com/p/CiKXORDrQYM/?utm_source=ig_embed&ig_rid=d94e42df-34a4-4774-9b4c-977d4276ce38