கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருள்குன்று பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தங்கம் வீட்டிற்கு சென்ற ஒரு பெண் தாலி தோஷம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அந்த பெண் வீட்டில் வைத்து பரிகார பூஜைகள் செய்துள்ளார். அப்போது அந்த பெண் கூறியதை கேட்டு தங்கம் 30 பவுன் நகையை பூஜையில் வைத்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண் தங்க நகைகளை துணியில் கட்டி கொடுத்து மாலையில் அதனைப் பிரித்துப் பார்க்குமாறு கூறிவிட்டு சென்றார்.
மாலையில் திறந்து பார்த்தபோது அந்த துணியில் கவரிங் நகைகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தங்கம் உடனடியாக கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தங்க நகைகளின் நூதன முறையில் திருடி சென்ற பெண்ணை சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக தேடி வருகின்றனர்.