Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு” சங்கிலியை பறித்த புதுமாப்பிள்ளை…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடமிருந்து புதுமாப்பிள்ளை தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகரில் புவனேஸ்வரி என்ற பெண் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் வாலிபர் ஒருவர் புவனேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் யோகேஷ் என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் யோகேஷ் பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்தது உறுதியானது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு யோகேஷூக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து தாலி பிரித்து கோர்க்கும் சடங்கை நடத்த வேண்டும். ஆனால் தாலி சங்கிலி வாங்க போதிய பணம் இல்லாததால் யோகேஷ் புவனேஸ்வரியிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் யோகேஷை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |