தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்து கடந்த 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்திற்கு ஊரே பிரமிக்கும் வகையில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் புதுமண தம்பதிகளான இவர்கள் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றுள்ளனர்.
அப்போது சிங்கிளே வெறுப்பேற்றும் வகையில் சில போட்டோக்களை விக்னேஷ் சிவன் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் விக்கியின் முகத்தோடு முகம் வைத்து கண்களை மூடிய நயன் சிரிக்கிறார். அப்போது நயன்தாரா கழுத்தில் வெறும் மஞ்சள் கயிறு மட்டுமே உள்ளது. மற்றொரு போட்டோவில் கணவர் விக்னேஷ் சிவனுடன் பிளாக் டி-ஷர்ட் ஜீன்ஸ் பேன்ட் பிளாக் ஓவர் கோட் அணிந்து உள்ளார். இதிலும் மஞ்சள் கயிறு தவிர வேறு எந்த ஆவணங்கள் அணியவில்லை. இந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் லேடி சூப்பர் ஸ்டார் இப்படி என புருவங்களை உயர்த்தியுள்ளனர்.