Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தாலுகாவிற்கு வந்த வாக்குப்பதிவு எந்திரம்… அறைக்கு சீல் வைத்த அதிகாரி… 24 மணி நேர பாதுகாப்பு பணி தீவிரம்..!!

சிவகங்கை திருப்பத்தூர் தாலுகாவில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்தியபடி காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற இருப்பதால் வாக்குப்பதிவு எந்திரங்களை அந்தந்த மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியரின் தலைமையில் இந்த பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று நள்ளிரவில் லாரி மூலம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டது.

அதன்பின் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு எந்திரங்களை கண்காணிப்பதற்காக அறையினுள் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் அதிகாரி சிந்து தலைமையில் அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைக்கு காவல்துறையினர் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |