Categories
மாநில செய்திகள்

தாழ்த்தப்பட்ட மாணவர்களை டார்ச்சர் செய்த தலைமை ஆசிரியை…. நடந்தது என்ன?…. ஈரோட்டில் அரங்கேறிய கொடூரம்…..!!!!

ஈரோடு பாலக்கரையில் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக கீதாராணி என்பவர் உள்ளார். இந்நிலையில் தலைமை ஆசிரியை மாணவர்களிடம் சாதிபாகுபாடு பார்த்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதாவது அப்பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவ- மாணவிகள் 6 பேரை கழிவறையை சுத்தம் செய்ய கூறியிருக்கிறார். இதனால்  அவர்களும் வேறு வழியின்றி அதனை செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து வெளியில் சொல்ல முடியாமல் மாணவ-மாணவிகள் அஞ்சி தங்களுக்குள்ளேயே வைத்து இருக்கின்றனர்.

ஒருக் கட்டத்தில் அந்த 6 பேரில் ஒரு மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் வந்துள்ளது. அதன்பின் அந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த மாணவர் ப்ளீச்சிங் பவுடரை அதிகம் கையாண்டதும், கழிவறையை சுத்தம் செய்யும் போது கொசுக்கள் கடித்ததால் காய்ச்சல் வந்து இருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர். பின் கழிவறையை சுத்தம் செய்ததை அந்த மாணவர் தன் தாயிடம் கூறினார். சென்ற வாரம் கழிவறையை சுத்தம் செய்து விட்டு மாணவ-மாணவிகள் வெளியில் வரும்போது பெற்றோர்கள் நேரடியாகவே பார்த்து விட்டனர். இது பற்றி அவர்களிடம் கேட்டபோது, தலைமை ஆசிரியையைத்தான் கழிவறையை சுத்தம் செய்ய கூறியதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அவர்கள் தலைமை ஆசிரியை மீது போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். இதனிடையில் தலைமை ஆசிரியை கீதாராணி தலைமறைவாகிவிட்டார். அந்த வகுப்பில் மொத்தம் 40 மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களிடம் மட்டுமே கீதாராணி கழிவறையை சுத்தம்செய்ய கூறியிருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெற்றோர் அளித்த புகாரின் படி காவல்துறையினர் கீதாராணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் தலைமறைவான கீதாராணியை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |