வேடசந்தூரில் குட்டி விமானம் ஒன்று தாழ்வாக பறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூரில் நேற்று 10:15 மணிக்கு குட்டி விமானம் ஒன்று வானில் வட்டமிட்டபடி பரந்தது. இந்த குட்டி விமானம் தாழ்வாகப் பறந்ததால் அப்பகுதி முழுவதும் பயங்கர சத்தம் கேட்டது.
சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அசம்பாவிதம் ஏதும் நடந்து விட்டதா? என பயந்து போய் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார்கள். அப்போது குட்டி விமானம் கீழே பரந்ததால்தான் சத்தம் கேட்டு இருக்கின்றது என அறிந்து நிம்மதி அடைந்தனர். சிறிது நேரம் வானில் வட்டமிட்டபடி பறந்துகொண்டிருந்த குட்டி விமானம் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றது.