செவந்தாம்பட்டி, பில்லாதுரை உள்ளிட்ட இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் பல்வேறு தூய்மை பணிகளை மேற்கொண்டார்கள்.
திருச்சி மாவட்டம், தா.பேட்டை பேரூராட்சி சார்பாக பொது சுகாதாரத் தூய்மை பணி சிறப்பு முகாம் நடந்தது. பேரூராட்சித் தலைவர் ராஜலட்சுமி கணேசன் தலைமை தாங்கிய இந்த முகாமில் துணை தலைவர் எம். மயில்வாகனன், பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் பேரூராட்சி பணியாளர்கள், கவுன்சிலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டார்கள். இந்த முகாமில் செவந்தாம்பட்டி, பில்லாதுரை உள்ளிட்ட இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் பல்வேறு பணிகளை மேற் கொண்டார்கள்.