மகாராஷ்டிரா மாநிலம் தெர்கானில் உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன் தனது கைப்பேசியில் தொடர்ந்து திகில் காட்சிகள் நிறைந்த வீடியோக்களை பார்த்து வந்துள்ளான். பின்னர் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒரு பொம்மையை தூக்கிலிடும் படியாக செய்துவிட்டு பொம்மை இறந்து விட்டதாக எண்ணி தன் முகத்தை துணியை கொண்டு அழுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்போது சிறுவனின் தாய் வீட்டு வேலை செய்து கொண்டிருந்ததால் இதை கவனிக்க வில்லை.
பின்னர் சிறிது நேரம் கழித்து இந்த சம்பவத்தை பார்த்து பதறிப்போன தாய் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தெரிவித்த போலீசார் “சிறுவன் தனது கைப்பேசியில் தொடர்ந்து திகில் காட்சிகள் நிறைந்த வீடியோவை பார்த்து வந்ததால் இந்த செயலை செய்துள்ளார். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கவனிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் நன்கு உணர்த்துகிறது” என்று கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.