கொரோனா காரணமாக நகை வியாபாரம் நடைபெறாமல் இருந்த சூழலிலும் விலை நிர்ணயம் என்பது இருந்து வந்தது. அந்த சமயத்திலும் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்தது. சர்வதேச பொருளாதார சூழல் காரணமாகவும் தங்கத்தின் விலை ஏறி இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகமாக உயர்வை கண்டு தற்போது ஒரு சவரன் 39 ஆயிரத்த்தை கடந்து 40 ஆயிரத்தை நெருங்குகிறது.
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 256 ரூபாய் அதிகரித்து இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக 39 ஆயிரத்து 32 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிராமுக்கு 37 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 879 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய உச்சத்தை தங்கத்தின் விலை தொட்டு வருவது குறிப்பிடத்தக்கது.