Categories
தேசிய செய்திகள்

திக்..திக்… திக்…! பெரிய சேதம் ஏற்படும்…. மே 3ஆம் தேதி வரை…. ஊரடங்கு நீட்டித்து அறிவிப்பு …!!

டெல்லியில் மே மூன்றாம் நாள் வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த 19ஆம் நாள் இரவு முதல் ஏப்ரல் 26ஆம் நாள் காலை ஐந்து மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். ஆனால் அங்கு தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே  மூன்றாம் நாள் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு இன்னும் 24,000த்தை கடந்து செல்லும் நிலையில் இந்த முழு ஊரடங்கு நீட்டிப்பு என்பது தேவையான ஒன்றாக பார்க்கப்படுகிறது.  பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கே போதிய அளவு படுகைகள் ஆக்ஸஜன் இல்லாத நிலையில், தோற்று அதிகரிக்கும் பட்சத்தில் மிகப்பெரிய சேதங்களை சந்திக்க நேரிடும் என்பதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |