இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் ஓமிக்ரானை கட்டுப்படுத்த அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை ஏதேனும் கொரோனா தொடர்பான கட்டுபாடுகளை கொண்டுவருவதற்கு ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தற்போது 100க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் சில கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை தங்கள் நாட்டிற்குள் விதித்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் ஓமிக்ரான் பரவலை தடுக்கும் பொருட்டு நியூ இயருக்கு முன்பாகவே ஏதேனும் புதிய கட்டுப்பாடுகள் தங்கள் நாட்டிற்குள் விதிக்கப்பட வேண்டுமா என்று அமைச்சரவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இங்கிலாந்து பிரதமரான ஜான்சன் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்பாக தேவைப்பட்டால் கொரோனா கட்டுப்பாடுகளை தங்கள் நாட்டிற்குள் கொண்டுவர தயங்க மாட்டேன் என்று பலமுறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆகையினால் நாளையிலிருந்து அடுத்தாண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் ஏதேனும் ஒரு கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.