Categories
தேசிய செய்திகள்

திக் திக் நாட்கள்…! அடுத்த 3வாரம் ரொம்ப முக்கியம்…. அரசு அதிகாரிகள் எச்சரிக்கை …!!

தற்போதைய கொரோனா சூழல் குறித்து கவலை தெரிவித்த நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர் விகே பால், கொரோனா நடவடிக்கையில் அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா நிலவரம் குறித்து அனைத்து யூனியன் பிரதேசங்களின்  தலைமை செயலாளர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா, மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷனுடன்  இணைந்து ஆய்வு கூட்டம் நடத்தினர்.

காணொளி மூலம் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர் வி.கே. பால் கொரோனா சூழல் குறித்து கவலை தெரிவித்தார். கொரோனா நடவடிக்கையில் அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும், யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள் மூன்று வாரங்களுக்கு முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |