Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

திக் திக் நிமிடங்கள்… புயல் எச்சரிக்கை… புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன..?

நிவர் புயலை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் உச்சகட்ட முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தீவிர புயலாக மாறி வருகிறது. இந்தப் புயலை எதிர்கொள்ள புதுவை அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடலோரப் பகுதிகள் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. கடலோரப் பகுதிகள் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி இன்று மாலை புதுச்சேரி இடையே கடல் புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக காற்று 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரி கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. பல அடி உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்ந்து வருகின்றன.

இதை மீறி செல்லும் சுற்றுலா பயணிகளை போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை முதல் பகல் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்ததால் அதை சமாளிக்கும் வகையில் அரசுத்துறை அனைத்தையும் தயார் நிலையில் வைத்துள்ளது. மேலும் 1200 பேரிடர் அமைப்பினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி புதுச்சேரி மாநிலம் முழுவதும் நேற்று இரவு 9 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மாலை 6 மணி வரை அதாவது 33 மணிநேரம் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் ஆகியவை அனைத்தும் மூடப்பட்டிருக்கும். அத்தியாவசிய தேவை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. புயலை எதிர்கொள்ள அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |