வருகின்ற திங்கள் முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என கர்நாடக மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து காவி துணி அணிந்து இந்து மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைந்தனர். இதனால் இரு தரப்பினரிடையே வெறுப்பு உணர்வு ஏற்பட்டு பெரும் பதற்றமான சூழல் உருவானது.
இந்நிலையில் கர்நாடகாவில் வருகின்ற திங்கள் முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பசுவராஜ் அறிவித்துள்ளார். இதன் பின்னர் கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்படும் எனவும் மீண்டும் கல்லூரிகளில் அமைதி நிலவ மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.